பாலா எனக்கு யார் ? என்னை பாதித்து, என் ஆளுமையில் மாற்றத்தை உருவாக்கிய ஒரு வழிகாட்டி என்று கூறலாம் . இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய சொற்களால் என் சிந்தையை சீரமைத்த மானசீக ஆசான் என்பதே உண்மை. பொன்னியின் செல்வன் என்ற சோழ சரித்திர நாவலை படித்து அதன் வசியத்தில் மயங்கி இருந்த நாட்கள் அவை. அந்த சமயத்தில் தான் "நீ அவசியம் உடையார் படிக்க வேண்டும்" என்று உறவு வழி சகோதரர் பாலாவை அறிமுகம் செய்தார். ஆனால் எடுத்த எடுப்பில் எனக்கு உடையாரை படிக்க ஆர்வமோ ஓர் பிடிப்போ இல்லை. ஒரு சோதனை முயற்சியாக அவருடைய இலக்கிய விருது பெற்ற "இரும்பு குதிரைகள் " என்ற நாவலை தேடி படித்தேன் . இவை நடந்தது எல்லாமே வகுப்பறை காலங்களில். கல்லூரி பாடத்தை ஆசிரியர்கள் மாறி மாறி சுவற்றிற்கு போதிக்கும் போது பாலகுமாரனின் எழுத்துக்கள் என்னோடு பேசிக்கொண்டு இருக்கும். அதுவும் ஒருவகையையில் போதனையே . "இரும்பு குதிரைகள்" எனக்கு புதிய எழுத்து மற்றும் சிந்தனை அனுபவம் தந்தது . இவரிடம் ஏதோ ஒன்று இருக்கு .அவசியம் உடையார் தேடி படித்த பின் தான் மறு வேலை என்று ஆரம்பித்தது உடையாரின் பயணம் .
பாட்சா படத்தில் ஒரு வசனம் வரும்."உடம்புல நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி இது எல்லாத்துலையும் வெறி ஏறி போன ஒருத்தன் தான் இப்படி அடிக்க முடியும்". இந்த வரிகள் அப்படியே பொருந்தும் உடையாரை எழுதிய பாலாவிற்கு. தன் வாழ்வின் 25 வருடத்தை இதற்கு அர்ப்பணித்து தான் கண்ட கனவை நிஜமாக்க அவர் மேற்கொண்ட பிரயத்தனம் மீண்டும் பெரிய கோவில் ஒன்றை கட்டியதற்கு ஒப்பாகும். சோழ தேசம் அதன் நாகரிகத்தின் மீது கொண்ட பற்று தான் இது போன்ற ஒரு பெரும் படைப்பினை உருவாக்க உந்து சக்தியாக இருக்க முடியும் .
எல்லாவற்றிக்கும் மேலாக ஆன்மிகம் மற்றும் தன்னுணர்தல் இந்த இரண்டிலும் அடிப்படை புரிதல் ஏற்பட ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய அவரின் நூல் "இது போதும்". அந்த ஒரு நூல் போதும் பாலகுமாரன் என்ற ஆளுமை யார் என்று பிரகடனம் செய்ய. மெய்யுணர்ந்த ஞானியாக மட்டும் இல்லாமல் தன் ஞான அனுபவத்தை எல்லாருக்கும் குறிப்பாக எளியோருக்கும் கொடை அளித்த "எழுத்து சித்தர்" அவர். என்றும் அவரின் சொற்கள் சிந்தையில் ஒலித்து எனக்கு வழி காட்டும் அசரீரி.
அவற்றில் ஒன்று:
"நெருப்பு மாதிரி வேலை செய்யணும் குமாரு , தியாகம் தான் உன்னை உயர்த்தும்!!! "...