தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி, என்.ஐ.டி இந்தியவின் தலைசிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் ஒன்று. ஆனால் இதற்கு மற்றொரு சிறப்பம்சம் என்பது அதன் காஸ்மோபொலிடன் தன்மை. காஸ்போலிடன் தன்மை என்பது பன்முக கூறுகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் அம்சம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பல்வேறு இனம், மொழி, மதம், கலாச்சாரம், மற்றும் பண்பாட்டு அடையாளங்களை கொண்ட மாணவர்களை உள்ளடக்கியது என்.ஐ.டி போன்ற தேசிய கல்வி நிறுவனத்தின் தனித்தப் பண்பு. வெளித் தேற்றத்தில் இந்திய மக்களிடம் பல வகை வேறுபாட்டுகள் இருந்தலும் அவர்களுக்கான பொது தேவைகள் மற்றும் எதிர்பார்புகள் என்றும் இருந்து கொண்டே உள்ளது. குறிப்பாக எதிர்காலத் தலைமுறையிரான மாணவர்களின் எண்ணங்களுக்கு என்றும் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தியாவின் டெல்லி (வடக்கு), திருப்பதி(தெற்கு), கொல்கத்தா (கிழக்கு), மும்பை (மேற்கு), திரிபுரா(வடகிழக்கு) என 5 பூகோளப் பகுதிகளில் இருந்து மாணவர்களின் மனநிலைக் குறித்த சிறு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. வரப்போகும் நாடளுமன்றத் தேர்தல், நாட்டின் கல்வி நிலை, வேலை வாய்ப்பு, அடிப்படை பிரச்சனைகள் போன்ற விஷயங்களில் அவர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
1) ஆனந்த் மோகன் (புது டெல்லி), சிவில் இன்ஜினியரிங் (முதல் ஆண்டு)
மாணவனாக வரப்போகும் அரசிடம் இருந்து எனது முதன்மை எதிர்பார்பானது அடிப்படைக் கல்வி முறையில் மாற்றம். எங்களைப் போன்ற மாணவர்களுக்கு பள்ளி மட்டும் கல்லுாரிகளில் லேப் மற்றும் பிராக்ட்டிகல் போன்ற நடைமுறைக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வு போன்றவற்றிற்கு மதிப்பெண்களே பிரதானம் என்பதால் அறிவு சார்ந்த நடைமுறை கல்விப் பயிற்சியை விட மதிப்பெண் பெறுவதற்கே படிக்கப் பயிற்றுவிக்கபடுகிறோம். அதனால் கல்வித் துறையில் மாற்றத்தை வரப்போகும் அரசிடம் எதிர்பார்க்கிறேன். அடுத்ததாக டெல்லிப் போன்ற மெட்ரோ நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு பிரச்சனை, நீர் வடிகால் நகர்ப்புறக் கட்டமைப்பு பிரச்சனைகளில் வரப்போகும் அரசின் கவனமானது இருக்க வேண்டும். நாட்டில் இளைஞர்களின் வேலை வாய்ப்பு பிரச்சனைப் பொறுத்த வரையில் இளைஞர்களின் பார்வையானது குறுகிய கண்ணோட்டத்திலேயே உள்ளது. வகுப்பில் நன்கு படிக்க மட்டுமே தெரிந்த முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை பின்பற்றியே செயல்படும் நோக்கத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் இருக்கிறார்கள். இதனால் மாணவன் தனித்தன்மை இழந்து திறமைகள் வெளியே வரமுடியாமல் போவதே வேலையில்லாத திண்டாட்டத்திற்கு முக்கியக் காரணம். ஜப்பான், பின்லாந்து போன்ற நாடுகளில் திறன் சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். நம் நாட்டில் இந்த அம்சம் இல்லாதது தான் மிகப்பெரிய குறைபாடு ஆகும்.
2) விஹான் பட் (மும்பை), புரொடக்க்ஷன் இன்ஜினியரிங் (முதல் ஆண்டு)
வரப்போகும் அரசிடம் எனது எதிர்பார்பானது நாட்டின் வளர்ச்சியே. இந்தியா தனது வளர்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக உற்பத்தித் துறையின் வளர்சியானது வரப் போகும் சில ஆண்டுகளில் சிறப்பு கவனம் செலுத்தி அதிகரிக்க வேண்டும். ஐ.டி துறைகளில் இந்தியவின் வளர்ச்சியான அபரிமிதமாக உள்ளது. ஆனால் உற்பத்தி துறை மிகவும் பின் தங்கியுள்ளதால் நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக உள்ளது. அமையப் போகும் அரசானது நாட்டின் உற்பத்தி திறனை அதிகரித்து பலப்படுத்தும் நோக்கதில் செயல்பட வேண்டும். வேலை வாய்ப்பு பிரச்சனைக்கு அடிப்படை காரணம் ஸ்கில் டெவலப்மென்ட் எனப்படும் திறன் மேம்பாடு குறித்து விழிப்புனர்வு இல்லாததே. கல்வி நிறுவனங்கள் வேலைக்கான திறமைமிக்க இளைஞர்களை உருவாக்காமல் பெயரளவில் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மக்களின் தேவைகளும் அதற்கான சந்தையும் மிகப் பெரியது. அவற்றை புரிந்துகொண்டு அதற்கேற்ப திறமைளை வளர்த்துக் கொண்டு புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்குவதே சரியாக இருக்கும். அரசங்கம் அதற்கான சூழல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
3)சக்ரதார் (கொல்கத்தா), எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (முதல் ஆண்டு)
ஒரு இளைஞராக வரப்போகும் அரசிடம் கிராமப்புற வளர்சியையே நான் எதிர்பார்க்கிறேன். இந்தியா போன்ற பெரிய நாட்டில் இன்னும் பல கிராமங்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் சென்றடையவில்லை. அரசாங்கம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விதைகள், மற்றும் பல சலுகைகள் கொடுத்து வந்தாலும் அவற்றின் பயன் 10 சதவீதம் கூட அவர்களுக்கு சரியாக சென்றடைகிறதா என்று தெரிவதில்லை. இதனால் விவசாயிகளின் தற்கொலைகள் இன்றும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. நாட்டின் வேலையில்லாப் பிரச்சனையானது பூதாகரமாக உள்ளது. ஒரு வேலைக்கு பத்துப் பேர் போட்டியிட வேண்டி நிலமைதான் உள்ளது. குறிப்பாக புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் வரும் நான்கைந்தாண்டுகளில் நாட்டில் பெரும் சிக்கலை இது உருவாக்கும்.
4) சுப்ரதீப் சாகா (திரிபுரா), கம்ப்யூட்டர் சயின்ஸ் (முதல் ஆண்டு)
நான் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவன் என்ற முறையில் நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சியானது மிகவும் பின்தங்கியே உள்ளது. வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் அடுத்தாண்டு எப்போது தேர்தல் நடக்கும் என்றே அறிந்திருக்க மாட்டார்கள். ஜனநாயக நாட்டின் குடிமக்களான அவர்களுக்கு நாட்டின் தேர்தல், அட்சியாளர்கள், நிர்வாகம் போன்றவற்றை அறியாதவர்களாகவே உள்ளார்கள் எங்கள் மக்கள். அதேப்போல் வருங்கால கூடுதல் இளம் தலைமுறையினர் நாட்டின் அரசியல்வாதிகளை தேர்வு செய்ய வேண்டும். நம் தேவைகள், பிரச்சனைகள், நமது சிக்கல்கள் போன்றவற்றை அறிந்து அதற்கான சரியான ஆட்சியாளர்களை நியமிக்க வேண்டும். அதேப் போல தரமான கல்வி நிறுவங்கள் குறைவாக உள்ளதே வேலையில்லாப் பிரச்சனைக்கு முக்கிய காரணம். ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவங்கள் போன்று சிறப்பான தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக வேண்டும். இது போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாவதில் அரசாங்கத்தின் தலையீடானது குறைக்கப்பட வேண்டும். இதைச் சரி செய்தாலே வேலையில்லாப் பிரச்சனை பெரும்பாலும் தீர்ந்துவிடும். கல்வியளிப்பதை வெரும் சடங்கு போன்று இருக்கும் இந்த நிலமை சரி செய்யப்பட்டு அறிவினை அளிக்கும் நோக்கில் கல்வியானது வழங்கப்பட வேண்டும்.
5) பிரனீத் (திருப்பதி), கெமிக்கல் இன்ஜீயரிங் (முதல் ஆண்டு):
வரப்போகும் தேர்தலில் பதவியேற்கும் அரசானது தான் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அனைவரும் அளி்க்கும் வாக்குறுதிகளில் கொஞ்சமாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆட்சி அமைப்பவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் குறுகிய வளங்களை வைத்துக் கொண்டு சிறப்பாக செயல்படும்போது நம் பின் தங்கியிருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தததே ஆகும். அதேப் போல் வேலையில்லப் பிரச்சனைக்கு தீர்வை நாம் தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்டடைய வேண்டும். பீரிலான்சிங் என்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தே வேலைவாய்பை உருவாக்கும் காலமிது. இதன் மூலம் பன்முகத்தன்மையும் வளரும். நிரந்தர வருமானம் வருகிறதே என்று அனைவரும் அரசு வேலைக்கே அதிகம் கவனம் செலுத்தாமல் சுயசார்பு வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்வதே புத்திசாலித்தனமாகும். மிகப் பெரிய மனித வளம் கொண்ட நமது நாட்டிற்கு சுயத்திறன் சார்ந்த தொழில் தான் தகுந்த தீர்வாக இருக்க முடியும்.
வ.கண்ணன். திருச்சி, தினமலர், பெஸ்டெம்பர் சிறப்பு மலர்.