Monday, June 25, 2018

இந்தியா தன் வரலற்றிலேயே மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது!!!


"நீரின்றி அமையாது உலகு"
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூலான திருக்குறளில் முதல் அதிகாரமான "கடவுள் வாழ்த்து"க்கு அடுத்து வருவது "வான் சிறப்பு". கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய இடத்தில் "மழையும் தண்ணீரும்" இருப்பதை இதன் மூலம் உணரலாம். மழையானது பொய்த்து போனால் 'புல்லின் நுனியை கான்பது கூட அரிதாகிவிடும், தானமும் தவமும் தங்காமல் போகும், மனித ஒழுக்கமே கெடும் சூழ்நிலை ஏற்படும்' என்று வள்ளுவர் வரிசையாக நீரின் இன்றியமையை வான்சிறப்பில் வலியுறுத்துகின்றார்.

நம் நாட்டின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி கொள்கைகளை வரையரை செய்து செயல்படுத்தும் அமைப்பான "நிதி ஆயோக்" கடந்த வாரம் நாட்டின் நீர் மேலாண்மை குறித்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆய்வில் நாட்டின் நீர் நிலைகள், நிலத்தடி நீர் அளவு, குடிநீர், விவசாய பாசனத்திற்கான நீர் தேவை ஆகிய அம்சங்கள் விரிவாக கணக்கிப்பட்டுள்து. அதன்படி இந்தியா தன் வரலற்றிலேயே மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருவதாக அதிர்ச்சிக்குரிய தகவலை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்களானது:

·         நாட்டின் 60 கோடி மக்கள் தீவிரமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றனர். 70 சதவிகித நீர்நிலைகள் மாசடைந்துள்ள காரணத்தால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் நீர் சம்பந்தமான பிரச்சனைகளால் உயிரிழக்கின்றனர்.

·         வாட்டர் குவாலிடி இன்டெக்ஸ் (WQI) என்ற குறியீட்டு தரவரிசை பட்டியலில், 122 நாடுகளில் இந்தியா 120 இடத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது.

·         மாநிலங்கள் அளவிளான நீர் மேலாண்மையில் 71 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்திலும், 26 புள்ளிகளுடன் மேகாலையா கடைசியிடத்திலும் உள்ளன. 51 புள்ளிகளுடன் தமிழ்நாடு 9வது இடத்தில் உள்ளது.

·         நாட்டின் 60 மக்கள் தொகையை உள்ளடக்கியுள்ள மாநிலங்களான .பி, பிகார், ராஜஸ்தான், அரியானா நீர் மேலாண்மையில் பின் தங்கியுள்ளது நாட்டின் உணவு பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலையில் உள்ளது.

·         2030 ஆம் ஆண்டில் நாட்டின் நீர் தேவை தற்போதைய இருப்பை காட்டிலும் இரு மடங்காய் அதிகரிக்கும். இதன் காரனமாக 40 சதவிகித மக்களுக்கு குடிநீர் வழங்க வழியில்லாமல் போகும்.

·         டெல்லி, பெங்களூர், சென்னை உட்பட 21 நகரங்களில் 2020 இல் நிலத்தடி நீரானது இல்லாமால் போகும் சூழ்நிலை உள்ளதால் 10 கோடி பேர் பாதிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு பல்வேறு தகவல்களை ஆய்வரிக்கை வெளியிட்டுள்ளது நாட்டின் நீர் மேலாண்மை குறித்த நிதர்சனத்தை நமக்கு  உணர்த்துகிறது. மக்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் தண்ணீர் பிரச்சனை நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மேதலுக்கு காரணமாக உள்ள நிலையில் இந்த அறிக்கை இந்தியா இப்போது சந்திக்கின்ற பிற்காலத்தில் சந்திக்க இருக்கும் சவால்களை வரிசையிட்டு காட்டுகிறது. 3ஆம் உலகப்போர் பெட்ரோலுக்காக இல்லாமல் தண்ணீருக்காக தான் வரும் என நிபுனர்கள் கூறும் கருத்தானது இதன் மூலம் நிருபனமாகியுள்ளது.

Tuesday, June 19, 2018

நான்கில் மூன்று டையர்கள் பஞ்சரா?


இந்திய பொருளாதாரத்தின் பரிதாப நிலை குறித்து .சிதம்பரத்தின் பகீர் பதிவுகள்...

முன்னால் நிதியமைச்சர் .சிதம்பரம் சில நாட்களாகவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அவற்றின் ஒரு பகுதியாக தனது டிவிட்டர் பதிவில் "இந்திய பொருளாதாரம் என்ற வண்டியின் நான்கு டயர்களில் மூன்று டயர்களான - ஏற்றுமதி, தனியார் முதலீடு மற்றும் தனியார் நுகர்வு பஞ்சர் ஆகிவிட்டது" என்று பகீர் குற்றசாட்டு வைத்துள்ளார். அவர் தன் பதிவில் மேலும் கூறியதாவது:

·         ரிசர்வ் வங்கியின் ஆய்வில் 48 சதவித மக்கள் கடந்த 12 மாதங்களில் இந்திய பொருளாதரம் மேலும் மோசமாகிவிட்டது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

·         விவசாயிகளுக்கான அடிப்படை ஆதார விலை மற்றும் கூலிகள் போதுமானதாக இல்லாதது அவர்களை பெரும் சிரமத்தில் தள்ளியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கோபத்தில் நாடெங்கும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

·         அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையானது சாமானிய நுகர்வோர்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

·         வேலைவாய்பின்மை என்பது இளைஞர்களிடையே கானப்படும் பெரும் பிரச்சனை ஆகும். ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற அரசின் வாக்குறுதி வெறும் சொற்களாக மட்டுமே உள்ளது. இது நாட்டின் பட்டதாரி இளைஞர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

·         பணமதிப்பு நீக்கம்(டீமானடைசேசன்) காரணமாக நாட்டின் வளர்ச்சி 8.2%ல் இருந்து 6.7% ஆக குறைந்துள்ளது. 50 ஆயிரம் சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது. மேலும் திருப்பூரில் 2017–2018 கான ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியிலிருந்து 36 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த நிலை பொருந்தும்.

·         குளறுபடியாக அமல்படுத்தபட்ட ஜிஎஸ்டி வரி தொழில் மற்றும் வர்த்தகத்தை தொடர்ந்து பாதித்து வருகிறது.

·         வங்கிகளின் வாராக்கடன் கடந்த நான்கு வருடங்களில் 2.63 லட்சம் கோடியிலிருந்து 10.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும். இதன் காரணமாக எந்த வங்கியும் தொழில் முதலீட்டிற்கும் கடன் கொடுக்க முடியாமல் பரிதாப நிலையில் உள்ளது.

·         நாட்டின் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் வட்டி விகிதத்தில் உயர்வு ஏற்பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு மேலும் சுமையை கூட்டும்.

·         சமூக பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் திட்டங்கங்கள் புறக்கணிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தவில்லை.

இவ்வாறு நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சிதம்பரம் விரிவான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.