Tuesday, June 19, 2018

நான்கில் மூன்று டையர்கள் பஞ்சரா?


இந்திய பொருளாதாரத்தின் பரிதாப நிலை குறித்து .சிதம்பரத்தின் பகீர் பதிவுகள்...

முன்னால் நிதியமைச்சர் .சிதம்பரம் சில நாட்களாகவே நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அவற்றின் ஒரு பகுதியாக தனது டிவிட்டர் பதிவில் "இந்திய பொருளாதாரம் என்ற வண்டியின் நான்கு டயர்களில் மூன்று டயர்களான - ஏற்றுமதி, தனியார் முதலீடு மற்றும் தனியார் நுகர்வு பஞ்சர் ஆகிவிட்டது" என்று பகீர் குற்றசாட்டு வைத்துள்ளார். அவர் தன் பதிவில் மேலும் கூறியதாவது:

·         ரிசர்வ் வங்கியின் ஆய்வில் 48 சதவித மக்கள் கடந்த 12 மாதங்களில் இந்திய பொருளாதரம் மேலும் மோசமாகிவிட்டது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

·         விவசாயிகளுக்கான அடிப்படை ஆதார விலை மற்றும் கூலிகள் போதுமானதாக இல்லாதது அவர்களை பெரும் சிரமத்தில் தள்ளியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கோபத்தில் நாடெங்கும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

·         அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையானது சாமானிய நுகர்வோர்களை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

·         வேலைவாய்பின்மை என்பது இளைஞர்களிடையே கானப்படும் பெரும் பிரச்சனை ஆகும். ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ற அரசின் வாக்குறுதி வெறும் சொற்களாக மட்டுமே உள்ளது. இது நாட்டின் பட்டதாரி இளைஞர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

·         பணமதிப்பு நீக்கம்(டீமானடைசேசன்) காரணமாக நாட்டின் வளர்ச்சி 8.2%ல் இருந்து 6.7% ஆக குறைந்துள்ளது. 50 ஆயிரம் சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்புர்வமாக அறிவித்துள்ளது. மேலும் திருப்பூரில் 2017–2018 கான ஏற்றுமதி 50 ஆயிரம் கோடியிலிருந்து 36 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த நிலை பொருந்தும்.

·         குளறுபடியாக அமல்படுத்தபட்ட ஜிஎஸ்டி வரி தொழில் மற்றும் வர்த்தகத்தை தொடர்ந்து பாதித்து வருகிறது.

·         வங்கிகளின் வாராக்கடன் கடந்த நான்கு வருடங்களில் 2.63 லட்சம் கோடியிலிருந்து 10.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும். இதன் காரணமாக எந்த வங்கியும் தொழில் முதலீட்டிற்கும் கடன் கொடுக்க முடியாமல் பரிதாப நிலையில் உள்ளது.

·         நாட்டின் பணவீக்க விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் வட்டி விகிதத்தில் உயர்வு ஏற்பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு மேலும் சுமையை கூட்டும்.

·         சமூக பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் திட்டங்கங்கள் புறக்கணிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தவில்லை.

இவ்வாறு நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சிதம்பரம் விரிவான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.


1 comment:

  1. Harrah's Resort And Casino in Atlantic City
    Harrah's Resort And Casino, owned by 온카지노 Vici Properties and operated by Caesars 1xbet korean Entertainment, opened 샌즈카지노 in 2004. The hotel is located in the Marina District and

    ReplyDelete