Sunday, April 8, 2018

கேள்வியின் நாயகனே...

'பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்'... கண்ணதாசனின் இந்த வரிகள் தான் சட்டென்று தோன்றியது என் மனதில். சுற்றி நடக்கும் வேடிக்கை விளையாட்டை காணும் போது "என்ன இது கூத்து" என்ற வியப்பு தான் காரணம் போல , இந்த வரிகள் என் நினைவில் எழ. உலக மேடையில் இந்த நடிகர்கள் எல்லாம் தன் பாத்திரத்தை அரங்கேன்றம் செய்கின்றனர்  வெகு இயல்பாக சலனம் ஏதும் இன்றி. எனக்கோ இப்பொழுது எல்லாம் நடிப்பதை விட பார்வையாளனாக வேடிக்கை பார்ப்பதே பிடிக்கின்றது. ஆனால் இங்கு ஒரு போதும் அரிதாரத்தை அலைக்க முடியாது. வேண்டும் என்றால் நமக்கு பிடித்த, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால்  நமக்கு தேவையான அரிதாரத்தை மாற்றி மாற்றி பூசி கொள்ளலாம். இதில் சுவாரசியம் என்னவென்றால் நடித்து கொண்டிருக்கும் போதே இந்த நாடகத்தை பார்வையாளனாய் வேடிக்கை பார்க்கும் அனுபவம் தான். இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு கொண்டாட்டம் வெறுமை நிறைவு ஆற்றாமை, இது போன்ற அனுபவம் அனைத்தும் யாருக்காக?. நடிகனுக்கா இல்லை பார்வையாளனுக்கா? இதற்கு விடை இதை நடத்தும் நாயகன் ஒருவனிடம் தான் உள்ளதாக சொல்கின்றனர் மெய் உணர்ந்த மாந்தர். விடை காண தேடுகிறேன் நான் அவனை. பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்...

பின் குறிப்பு : லேசுல  புரியாத மாதிரி இருந்தா தான் தத்துவமாம். மலை மேல பொட்டி கடை வெச்சிருந்த ஒரு அம்மா அப்படி தான் சொன்னாங்கப்பா, என்கிட்டயும் ...

No comments:

Post a Comment