மாற்றுக்குரல் மற்றும் எதிர்க்குரல்
தான் ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கும் அடிப்படை அம்சங்கள். இந்த பாலபாடத்தை உணராமல்
மோடி மாற்றுக்குரலை முற்றிலும் புறக்கணித்து தனது நண்பர்களை கூட தற்போது எதிரிகளாக
மாற்றிக்கொண்டார்.
காட்சிக்கு
வந்த பின்னணி
2013 செப்டம்பர் மாதம் பாஜ பாராளுமன்ற குழு 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் குறித்த முக்கிய முடிவை எடுக்கக் கூடியது. அந்த முடிவு பலருடைய எதிர்பார்ப்பு மட்டும் இல்லாமல் எதிர்ப்பையும் கிளப்புகின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. தேர்தலுக்கு 6 மாதம் முன்பே தனது பிரதமர் வேட்பாளரை பாஜ அறிவிக்கப் போகிறது என்ற செய்தி எதிர்பார்ப்பையும், அதன் விளைவாக இரு பெரும் எதிர்ப்பையும் எப்படி சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியையும் அனைவரும் எதிர்நோக்கினர். சொந்த கட்சியின் மூத்த தலைவரான அத்வானியும், தனது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக் கட்சித் தலைவரான நிதிஷ்குமாரும் மோடியை பாஜ பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். செப்டம்பர் 13, 2013 அன்று கட்சியின் அப்போதைய தலைவர் ராஜ்நாத்சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக பாராளுமன்ற குழு தேர்வு செய்ததாக அறிவித்தார். பாராளுமன்ற குழு நடத்திய அன்றையக் கூட்டத்தில் பங்கேற்காத அத்வானி தனது அதிருப்தியையும், கட்சியின் செயல்பாடு குறித்த கவலையும் நேரடியாக கடிதத்தின் மூலம் தெரிவித்தார். சுஷ்மாவும், ஜோஷியும் அத்வானியின் கருத்தையே உள்ளூரக் கொண்டிருந்தாலும், கட்சியின் முடிவை வேறு வழியின்றி ஏற்றனர். ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த உடனே 17 வருட கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார் நிதிஷ்குமார்.

இந்த இரு பெரும் எதிர்ப்பை மீறியும் மோடியை பிரதமர் வேட்பாளராக தைரியமாக முன்னிறுத்த முக்கிய பங்காக பலர் இருந்தனர். சோ, குருமூர்த்தி, சுப்பிரமணிய சுவாமி, ராம்ஜெத்மலானி, அருண்ஷோரிஆகியோர் இதில் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஊழல் குற்றச்சாட்டுகளால் அன்று பலவீனமடைந்திருந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க ஒரு ஆளுமைமிக்க தலைவராக மோடியை முன்னிறுத்தினால் தான் வெற்றிபெற முடியும். பூகம்பம், கலவரம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் குஜராத்தை முன்மாதிரி மாநிலமாக வளர்ச்சி அடைய செய்தார் மோடி. அந்த நிர்வாகத் திறன் காரணமாக வலிமைமிக்க தலைவராக மோடியை அடையாளம் கண்டனர். இதனால் கட்சியின் மூத்த தலைவர்களும், அறிவுஜீவிகளும், பத்திரிகையாகளும் மோடியை ஆதரித்தனர். அத்வானி பெருந்தன்மையோடு வழிவிட வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினர். இந்த பெரும்புள்ளிகளின் ஆதரவோடு கட்சியில் முன்னிறுத்தப்பட்டார். அது மட்டும் இல்லாமல் மற்ற கட்சித் தலைவர்களும் நம்பிக்கையுடன் மோடியை ஏற்றுக் கொண்டனர். கொள்கை ரீதியாக சிவசேனா உடன்பட்டது. சந்திரபாபு நாயுடுக்கு தனிப்பட்ட முறையிலேயே மோடியுடன் நட்புறவு இருந்தது. தமிழகத்தில் முதன்முறையாக நாடாளுமன்ற தோர்தலில் மூன்றாவது அணி தேசிய ஜனநாயக கூட்டணியாக உருவெடுத்தது. வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் என தமிழக தலைவர்கள் அனைவரும் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைய பிரச்சாரம் செய்தனர்.
ஆட்சிக்கு
வந்ததும் மாறிய காட்சிகள்
தேர்தல் முடிவில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமைத்தது. பதவியேற்பு விழாவில் அனைத்து தலைவர்களும் விருந்தினராக அழைத்து நாட்டிற்காக கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட விரும்புகிறேன் என்றார் மோடி. அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை பதவியேற்புக்கு அழைத்ததால் வைகோ உடனே எதிர்ப்புக் குரலை பதிவு செய்தார். மோடி ஆதரவு அணியிலிருந்து முதல் எதிர்ப்பை கிளப்பியவர் அவர்தான். அவர் முதற்கொண்டு கடந்த 4 1/2 ஆண்டுகளில் ராம்ஜெத்மலானி, அருண்ஷோரி, யஷ்வந்த் சின்கா, சிவசேனா கடைசியாக சந்திரபாபு நாயுடு என்று முன்பு இருந்த அனைவரும் இப்போது மோடியின் பக்கம் இல்லை.
காரணம் மோடியின் அணுகுமுறை மட்டுமே. ஆட்சிக்கு வரும்வரை நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசி வந்தார். ஆட்சி கைக்கு வந்ததும், முதல் வேலையாக கட்சியை கைக்குள் கொண்டுவர தனது வலதுகரமாக இருந்த அமித்ஷாவை கட்சியின் தேசியத் தலைவராக ஆக்கினார். மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷியை வழிகாட்டும் குழு என்று ஒன்றை உருவாக்கி ஓரம் கட்டினார். சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறையை கொடுத்து அவரை தனிமைப்படுத்தினார். கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்ததும், அமித்ஷாவை பயன்படுத்தி நாடு முழுவதும் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தினார். நாடு முழுவதும் தாமரையை மலரச் செய்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க முழு வீச்சுடன் செயல்பட்டார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா என்றால் பாஜ, பாஜ என்றால் மோடி. மொத்தத்தில் இந்தியா என்றால் தான்தான் என்பதை மறைமுக நோக்கமாக வைத்தார்.

கறுப்பு பணம், ஊழல் ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம் என்ற நோக்கத்திலிருந்து மோடி விலகிவிட்டதாக ஜெத்மலானி, அருண்ஷோரி ஆகியோர் ஒரே வருடத்தில் அவரை எதிர்க்கத் தொடங்கினர். ரத்தமும் சதையுமாக அரசியல் செய்து வந்த சிவசேனா இந்த அணுகுமுறையால் பாஜவை கடுமையாக எதிர்க்கக் தொடங்கியது. ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்து அது விலகியது. சிவசேனா கட்சியிலிருந்து மத்திய அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபுவை ராஜினாமா செய்ய வைத்து தனது கட்சியில் இணைத்து அமைச்சராக்கினார் மோடி. இதுதான் உச்சபட்ச சீண்டலாக சிவசேனாவிற்கு அமைந்தது. இதேதான் நட்புறவுடன் இருந்த சந்திரபாபுவிடமும் நடந்தது. இடையில் சேர்ந்த நிதிஷ்குமார் மட்டும் என்ன செய்வதென்று அறியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த அரவணைப்பற்ற தன்னிச்சையான செயல்பாடுதான் தற்போது நண்பர்களை எதிரிகளாக்கியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய ராகுல், தனது பேச்சுக்கு ஆளுங்கட்சி தரப்பில் உள்ள சிலரே கை குலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர் என்றார். நாடு முழுவதும் இந்த மனநிலை உள்ளது. இதை ஒன்றிணைப்பதே காங்சிரசின் வேலை என்றார் ராகுல். இதன் அர்த்தம் எலியும், பூனையுமாக இருந்த மாயாவதி, முலாயம் கட்சியினர் பாஜவை வீழ்த்த இடைத்தேர்தலில் கை கோர்த்தது போல, மம்தா, லாலு, ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, சிவசேனா, கம்யூனிஸ்ட், டிஆர்எஸ் என்று எதிர்தரப்பினர்கள் அனைவரையும் ஓரணியில் நிறுத்த முயற்சிப்பதே ஆகும்.
மக்களாட்சியான ஜனநாயகத்தில் அனைத்து தரப்பினரையும் பகைத்துக் கொண்டு செயல்படுவது என்றைக்கும் உகந்ததல்ல. இந்தியா போன்ற பலத்தரப்பட்ட மக்களை கொண்ட நாட்டில் அனைவரின் குரலுக்கும் செவிகொடுத்து நடக்க வேண்டியது தான் பொறுப்பான தலைவரின் கடமை. தட்டிக் கேட்க ஆளில்லாமல் தான்தோன்றித்தனமாக திரியும் தலைவனை கெடுக்க வேறு யாரும் தேவையில்லை. அவனே போதும். இதைத்தான் வள்ளுவர்
“இடிப்பாரை இல்லாத
ஏமரா
மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.”
கெடுப்பார் இலானும் கெடும்.”
என்றார். இது மோடிக்கு தற்போது முற்றிலும் பொருந்தும்.
கண்ணன்.வ, திருச்சி.