Wednesday, July 11, 2018

சீர்திருத்தங்களை எதிர்நோக்கி கவலைக்கிடமான நிலையில் உள்ளநாட்டின் உயர்கல்வி


2020ம் ஆண்டில் இந்தியாவின் 90 சதவிகித ஜி.டி.பி மற்றும் 75 சதவிகித வேலைவாய்ப்பு உற்பத்தி மற்றும் சேவை துறையை சார்ந்து இருக்கும். இதை பூர்த்தி செய்ய நாட்டின் நாட்டின் உயர்கல்வியானது மேம்பட்ட தரத்தில் திறமையும் ஆற்றலும் பெற்ற இளைஞர்களை உருவாக்கும் தகுதி பொருந்தியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் உயர்கல்வியின் தரமானது பிற நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி உள்ளது.

இந்திய உயர்கல்வியின் நிலவரம் 

“AISHE” எனப்படும் ஆல் இந்திய சர்வே ஆன் ஹையர் எடுகேஷன் என்ற இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அண்மையில் நாடு முழுவதும் உயர்கல்வி குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன்படி இந்தியாவில் தற்போது 864 பல்கலைகழகங்கள், 40,026 கல்லுரிகள், 11,669 (Stand alone colleges) மெத்தமாக உள்ளன. இவற்றில் சுமார் 3.57 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 12.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆய்வில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஒரே சமயத்தில் 3 கல்வி நிறுவனத்தில் முறையின்றி பணிபுரிவதாக தெரியவந்தள்ளது. மேலும் உயர்கல்வி படிக்க சேரும் மாணவர்களின் 25.2%( நுற்றுக்கு சுமார் 25 பேர்) மட்டுமே. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 46.9% மாணவர்களும் குறைந்தபட்சமாக பீகாரில் 14.9% மாணவர்களும் பிளஸ் 2விற்கு பின்னர் உயர்கல்வி பயில்கின்றனர். குறிப்பாக பெண்களின் எண்ணிக்கையானது 9.3% தான். ஆனால் அமெரிக்காவில் 85% மாணவர்களும், சீனாவில் 43% மாணவார்களும் பள்ளிக் கல்விக்கு பின்னர் உயர்கல்வி பெற்று வருகின்றனர். இந்தியாவும் 2020க்குள் இதை 30%மாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் தற்போது 47,575 மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். அதிக கல்லுாரிகளை கொண்ட நகரங்களைப் பொறுத்தவரை பெங்களூர் முதலிடத்திலும், ஜெய்ப்பூர் 2வது இடத்திலும், ஹைதரபாத் 3வது இடத்திலும் உள்ளது. அதே நேரத்தில் பீகார், ஜார்கன்ட் மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் மிகக் குறைவான கல்லுாரிகளே கொண்டு மிகவும் பின்தங்கி உள்ளது

மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளில் அறிவியல் 16.7 சதவீதத்துடன் முதலிடமும், இஞ்ஜினியரிங் 14.7%துடன் 2வது இடமும், பொருளாதாரம் 14.7%துடன் 3வது இடத்தில் உள்ளது. வருடத்திற்கு சுமார் 15 லட்சம் இஞ்ஜினியரிங் படித்து வெளியேறும் சூழ்நிலையில், வெறும் 35,451 மாணவர்களே எம்.பி.பி.எஸ் படிக்கின்றனர். அதிலும் 80% இஞ்ஜினியர்கள் வேலைக்கு தகுதியற்றவர்களாக உள்ளனர் என்று நிறுவனங்களின் ஆய்வுகள் கூறுகின்றன. கல்லுாரிகளின்செயல்பாடுகளில் தான் பெரும் அளவில் பிரச்னை உள்ளது என்பதுதான் இதற்கான காரணம்

ஆராய்ச்சித் துறையின் குறைபாடுகள் 

இந்தியாவின் உயர்கல்வியின் பிரச்னைகளும் சவால்களும் என்ற தலைப்பில் மனிதவளத் துறையின் பாராளுமன்றகுழு இதுகுறித்து ஆய்வு நடத்தியது. இதில் நிதி பற்றாக்குறை தான் முக்கிய பிரச்னையாககண்டுபிடிக்கபட்டுள்ளது. 65% யு.ஜி.சி நிதியானது மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கேஅளிக்கப்படுகிறது. பெருமளவில் கல்லுாரிகளை கொண்டுள்ள மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு35% நிதியே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சீனா போன்ற நமது போட்டி நாடுகள் தங்களின் கல்விநிலையங்களின் ஆராய்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்தி வரும்வேளையில் இந்திய கல்வி நிறுவனங்களின் ஆராய்சி துறைகளின் தரமானது மிக பின்தங்கியுள்ளது.குறிப்பாக பல்கலைக்கழக, கல்லுாரிகளின் பணிகளுக்கான தேர்வு மற்றும் நியமனங்களில் நிர்வாகதலையீடு மற்றும் அரசியல் தலையீடுகள் பெரும் அளவில் உள்ளது. இவையே இந்திய உயர்கல்வியின்பின்னடைவிற்கு பெரும் காரணமாக கருதப்படுகிறது

வெறும் 88லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேல் நாட்டிலிருந்து 2000 ஆண்டிற்குப் பின் அறிவியல் மற்றும்பெருளாதாரத் துறையில் 8 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். இந்தியவின் 10% மக்கள் தொகைகொண்ட ஜப்பான் கடந்த 18 ஆண்டுகளில் 15 நோபல் பரிசு அறிவியல் மற்றும் பெருளாதாரத் துறையில்பெற்றுள்ளது. ஆனால் சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளில் ஆராய்ச்சி துறைகளான அறிவியல் மற்றும்பெருளாதாரத்தில் ஒரு நோபல் பரிசு (அமிர்தயா சென் பொருளாதாரத்திற்கு) மட்டுமே பெற்றுள்ளது

இந்தியா தற்போதுஉலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக உருவெடுத்து வருகிறது. ஆண்டிற்கு 1.2 கோடி இளைஞர்கள்படித்துவிட்டு வேலைக்கு களமிறங்குகின்றனர். டைம் நிறுவனம் கடந்த ஆண்டு 77 நாடுகளில்,1000 பல்கலைக்கழகங்களில் நடத்திய சர்வேயில் உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை பட்டியலிட்டன.அதில் முதல் 250 இடங்களில் இந்தியாவில் ஒரு நிறுவனம் கூட இடம் பெறவில்லை. முதலிடதில்இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, 2வது இடத்தில் கேம்பிரிட்ஜ், 3வது இடத்தில் கலிபோர்னியா பல்கலைப்கழகம்உள்ளது. குட்டி நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங்க் போன்ற நாடுகள் கூட இந்தப் பட்டியலில்சிறப்பான இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் இருந்து 250 முதல் 500வது இடங்களில்ஐ..எஸ்.சி (பெங்களூர்), ..டி. (பாம்பே), ..டி.( டில்லி) உள்ளிட்ட மூன்று கல்லுாரிகள்மட்டுமே உள்ளன. பழமையான பின்தங்கிய முறைகளையே இன்றும் நம் உயர்கல்வியில் பின்பற்றிவருவதே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம். மேலும் நமது கல்வி முறை இன்னும் சர்வதேச மயம்ஆக்கப்படவில்லை என்பது முக்கிய குறைபாடக கூறப்படுகிறது. மேற்படிப்பிற்கு தரமான கல்விசூழல் இல்லாததால் வெளிநாடுகளில் சென்று இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெற்று வருவது தற்போதுஅதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி பல ஐரோப்பிய நாடுகள் இந்திய மாணவர்களுக்கு பல்வேறுசலுகைகளை வழங்கி வருகிறது. ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள்ரூ.2.5 லட்சம் தொடங்கி குறைவான தொகையில் படிப்புகளை வழங்குகின்றது. பின்வரும் காலங்களில்அதிக அளவிளான இளைஞர்கள் உயர்கல்வி பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை பூர்த்தி செய்யஉயர்கல்வி துறையில் உள்ள தற்போதைய குறைகளையும் குளறுபடிகளையும் உடனடியாக களைய வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகும் நிலையில் நாட்டின் உயர்கல்வியானது மிகப்பெரியசீர்திருத்தருத்தங்களை உடனடியாக எதிர்நோக்கியுள்ளது.

No comments:

Post a Comment