Sunday, October 21, 2018

ஸ்டீபன் ஹாகின்ஸ் கடைசி புத்தகம்



கடந்த மார்ச் மாதம் இந்த நுாற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாகின்ஸ் மரணம் அடைந்தார். இயற்பியல் மற்றும் வானியல் தொடர்பான துறைகளில் வியத்தகு ஆய்வுகளை செய்து காட்டிய அவரின் கடைசி புத்தகம் கடந்த தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து அறிவியல் ஆய்வாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதே அந்த புத்தகம். Brief Answer to The Big Questions, அதாவது பெரிய கேள்விகளுக்கு சுருக்கமான பதில்கள் என்ற தலைப்பில் அது வெளியாகியுள்ளது. உலகில் அனைவராலும் கேட்டு விவாதிக்கப்பட்ட 10 முக்கிய கேள்விகளுக்கான பதில்களை அதில் ஹாகின்ஸ் தெரிவித்துள்ளார்.

10 கேள்விகள்:
1)கடவுள் இருக்கிறாரா?
2)பிரபஞ்ச தொடக்கம் எவ்வாறு இருந்திருக்கும்?
3)எதிர்காலத்தை கணிக்க முடியுமா?
4)கால பிரயானம் சாத்தியமா?
5)வேற்று கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது சாத்தியமா?
6)பிளாக் ஹோல்(Black Hole) க்குள் இருபது என்ன?
7)இந்த உலகத்தை அழிவிலிருந்து தடுக்க முடியுமா?
8)வேற்று கிரகவாசிகள் உள்ளனரா?
9)ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மனிதர்களை பாதிக்குமா?
10) புவியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

மேற்கண்ட முக்கிய கேள்விகளுக்கு ஹாகின்ஸ் தனது அறிவியல் பார்வை மூலம் தனது கடைசி புத்தகத்தில் பதிலளித்துள்ளார். எதிர்காலத்தில் கணிப்பொறி இயந்திரம் மனிதர்களை விட (Artificial Intelligence மூலம்)அறிவு வளர்ச்சி பெற்று மனிதர்களையே ஆதிக்கம் செய்யும். மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி வேற்று கிரகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற அதிர்ச்சி தரும் பதில்கள் மற்றும் விளக்கத்துடன் தற்போது வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ள அந்த புத்தகம்.

அதிகரிக்கும் ஆன்லைன் உணவு மோகம்


இன்றைய இயந்திரமான வாழ்க்கை முறையில் பலருக்கும் வெளியில் சென்று அலைந்து திரிந்து பொருட்களை வாங்க பொறுமையோ, செலவிட நேரமோ இருப்பதில்லை என்பதை விட விருப்பமில்லை என்றே சொல்லலாம். இது போன்றவர்களாலேயே ஆன்லைன் வர்த்தகம் தற்போது அதிகரித்து வருகிறது. செல்போனை திறந்து ஒரு மெசேஜ் தட்டினால் போதும். வீடு தேடி பொருள் வந்துவிடும். எல்கட்ரானிக்ஸ் பொருட்கள், மருந்து வகைகள், ஆடைகள் என்று இருந்த நிலைமாறி இன்று உணவுக்கூட ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.தலையில் தொப்பியுடன் டிசர்ட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் உணவுப்பெட்டியோடு திருச்சி நகரில் அங்குமிங்குமக் சுற்றும் விற்பனையாளர்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். சென்னை, கோவைப் போன்ற மால் கலாச்சார நகரங்களில் பெரும்பாலும் காணப்படும் இந்த ஆன்லைனில் உணவை வீட்டிற்கு ஆடர் செய்து வாங்கும் பழக்கம் பெருகியுள்ளது. முன்பெல்லாம் பீட்சாவை தான் ஆடர் செய்து வாங்கும் வழக்கம் இருந்து வந்தது. தற்போது பிரியானியில் இருந்து சப்பாத்தி வரை அனைத்து உணவுகளையும் ஆன்லைன் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களில் ஆடர் செய்து சாப்பிடத் தொடங்கியுள்ளனர். திருச்சியின் முன்னணி ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு யூபர் ஈட்ஸ்(Uber Eats), ஜோமேட்டோ(Zomato), ஸ்விக்கி(Swiggy) போன்ற ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது.

நிறுவனங்களின் பின்னணி:

யூபர் ஈட்ஸ்: அமெரிக்க நிறுவனமான யூபர் ஆன்லைன் டாக்ஸி சேவை மூலம் உலகெங்கும் பிரபலமடைந்து தனது வியாபார சந்தையை பெருக்கியது. பின்னர் ஆன்லைன் உணவு விற்பனையை 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்தது. வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிய இந்த திட்டத்தை 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவின் சுமார் 190 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் கைகள் தற்போது திருச்சி வரை நீண்டுள்ளது.

ஜோமேட்டோ: 2011 இல் தொடங்கப்பட் இந்திய நிறுவனமான இதன் தலைமையகம் ஹரியான மாநிலம் குருகிரமத்தில் உள்ளது. 2500க்கும் மேற்ப்பட்ட வேலையாட்களை கொண்டு 24 நாடுகளில் இயங்கி வருகிறது இந்த நிறுனவம். இந்தியாவில் மட்டும் 63க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஜோமேட்டோ நிறுவனத்தில் சமீபத்தில் திருச்சியிலும் தடம் பதித்துள்ளது.

ஸ்விக்கி: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஸ்டாட் அப் நிறுவனமான ஸ்விக்கி, இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஆன்லைன் உணவு விற்பனையை தொடங்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. புதிதாக இனைந்துள்ள திருச்சியையும் சேர்த்து இந்தியாவில் தனது விற்பனையை நடத்தி வரும் எண்ணிக்கை சுமார் 40.

நேரடியாக ஹோடலில் சென்று சாப்பிடுவதை விட மலிவு விலையில் இந்த உணவு ஆப் நிறுவனங்கள் ஆப்ரில் வழங்குவதால் ஆரம்பத்தில் இந்த நிறுவனங்களுக்கு திருச்சி இளசுகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. டிஜிடல் யுகத்தில் சொகுசு வாழ்க்கைக்கு பழகி அனைவரும் சோம்பேறிகளாக வருவது அனைவரும் அறிந்த கதைதான். அதன் நீட்சியில் தான் ஆன்லைன் உணவு மோகம். போகிற போக்கில் பார்த்தால் ஆடர் செய்த உணவை ஊட்டிவிட ஆன்லைன் மூலம் ஆள் கிடைப்பார்களா என்ற காலம் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Monday, October 8, 2018

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே



நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள சீனுவாசு சுப்பராய பாலிடெக்னிக் கால்லுாரியில் 1965 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களின் கலந்தாய்வு(சந்திப்பு) கூட்டம் திருச்சி அருண் ஹோட்டல் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு பதவிகளில் பதவிகளில் பணியாற்றியவர்கள் ஒன்று கூடி கடந்த கால நினைவை பறிமாறிக்கொண்டனர். இது குறித்து விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற நிர்வாகப் பொறியாளர்(Executive Engineer) திரு. கேசவ ராவ் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன் படித்த நண்பர்களான நாங்கள் ஒருங்கிணைய வேண்டும் என்ற என்ற எண்ணம் வந்ததற்கு காரணம் உள்ளது. எங்களுடைய நண்பர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நான் உட்பட 4 நண்பர்கள் அவரை வீட்டில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம். அப்போது தான் நாம் 4 பேர் ஒன்றாக சந்தித்தது போல நம்முடன் படித்த 40 பேரும் சந்தித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே கடந்த ஒரு மாதமாக வாட்ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்தோம். இதில் சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் எங்களுக்கு முக அடையாளம் கூட மறந்து போயிருந்தது. அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்ள பேட்ஜ் ஒன்றை தயார் செய்து சட்டையில் அணிந்து கொண்டோம். மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் அரசாங்க துறைகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இந்த நிகழ்விற்காக ஓடி வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இத்தணை வருடங்களுக்கு பின் சந்தித்த எங்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. எங்களுடையை குழந்தைகள், குடும்பம் இத்தனை வருட வாழ்க்கை குறித்து ஆவலுடன் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் அனைவரும் கூடி மகிழ்ந்து சிரித்து விளையாடி வாட போட என்று உரிமையோடு அழைத்து கொள்ள பல ஆண்டுக்குப் பிறகு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தனித்துவம் மிக்க சந்தோஷமான நிகழ்வு நிச்சயம் எங்கள் ஆயுளை 10 வருடம் அதிகமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார். 

நிருபர்: வ.கண்ணன், திருச்சி.