Sunday, October 21, 2018

அதிகரிக்கும் ஆன்லைன் உணவு மோகம்


இன்றைய இயந்திரமான வாழ்க்கை முறையில் பலருக்கும் வெளியில் சென்று அலைந்து திரிந்து பொருட்களை வாங்க பொறுமையோ, செலவிட நேரமோ இருப்பதில்லை என்பதை விட விருப்பமில்லை என்றே சொல்லலாம். இது போன்றவர்களாலேயே ஆன்லைன் வர்த்தகம் தற்போது அதிகரித்து வருகிறது. செல்போனை திறந்து ஒரு மெசேஜ் தட்டினால் போதும். வீடு தேடி பொருள் வந்துவிடும். எல்கட்ரானிக்ஸ் பொருட்கள், மருந்து வகைகள், ஆடைகள் என்று இருந்த நிலைமாறி இன்று உணவுக்கூட ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.தலையில் தொப்பியுடன் டிசர்ட் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் உணவுப்பெட்டியோடு திருச்சி நகரில் அங்குமிங்குமக் சுற்றும் விற்பனையாளர்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். சென்னை, கோவைப் போன்ற மால் கலாச்சார நகரங்களில் பெரும்பாலும் காணப்படும் இந்த ஆன்லைனில் உணவை வீட்டிற்கு ஆடர் செய்து வாங்கும் பழக்கம் பெருகியுள்ளது. முன்பெல்லாம் பீட்சாவை தான் ஆடர் செய்து வாங்கும் வழக்கம் இருந்து வந்தது. தற்போது பிரியானியில் இருந்து சப்பாத்தி வரை அனைத்து உணவுகளையும் ஆன்லைன் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களில் ஆடர் செய்து சாப்பிடத் தொடங்கியுள்ளனர். திருச்சியின் முன்னணி ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு யூபர் ஈட்ஸ்(Uber Eats), ஜோமேட்டோ(Zomato), ஸ்விக்கி(Swiggy) போன்ற ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளது.

நிறுவனங்களின் பின்னணி:

யூபர் ஈட்ஸ்: அமெரிக்க நிறுவனமான யூபர் ஆன்லைன் டாக்ஸி சேவை மூலம் உலகெங்கும் பிரபலமடைந்து தனது வியாபார சந்தையை பெருக்கியது. பின்னர் ஆன்லைன் உணவு விற்பனையை 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்தது. வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிய இந்த திட்டத்தை 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவின் சுமார் 190 நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் கைகள் தற்போது திருச்சி வரை நீண்டுள்ளது.

ஜோமேட்டோ: 2011 இல் தொடங்கப்பட் இந்திய நிறுவனமான இதன் தலைமையகம் ஹரியான மாநிலம் குருகிரமத்தில் உள்ளது. 2500க்கும் மேற்ப்பட்ட வேலையாட்களை கொண்டு 24 நாடுகளில் இயங்கி வருகிறது இந்த நிறுனவம். இந்தியாவில் மட்டும் 63க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள ஜோமேட்டோ நிறுவனத்தில் சமீபத்தில் திருச்சியிலும் தடம் பதித்துள்ளது.

ஸ்விக்கி: பெங்களூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஸ்டாட் அப் நிறுவனமான ஸ்விக்கி, இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஆன்லைன் உணவு விற்பனையை தொடங்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. புதிதாக இனைந்துள்ள திருச்சியையும் சேர்த்து இந்தியாவில் தனது விற்பனையை நடத்தி வரும் எண்ணிக்கை சுமார் 40.

நேரடியாக ஹோடலில் சென்று சாப்பிடுவதை விட மலிவு விலையில் இந்த உணவு ஆப் நிறுவனங்கள் ஆப்ரில் வழங்குவதால் ஆரம்பத்தில் இந்த நிறுவனங்களுக்கு திருச்சி இளசுகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. டிஜிடல் யுகத்தில் சொகுசு வாழ்க்கைக்கு பழகி அனைவரும் சோம்பேறிகளாக வருவது அனைவரும் அறிந்த கதைதான். அதன் நீட்சியில் தான் ஆன்லைன் உணவு மோகம். போகிற போக்கில் பார்த்தால் ஆடர் செய்த உணவை ஊட்டிவிட ஆன்லைன் மூலம் ஆள் கிடைப்பார்களா என்ற காலம் விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

No comments:

Post a Comment