Monday, October 8, 2018

குறீயீட்டு ஆய்வாளர் ஆன பொறியாளர்!


பொறியாளராக பணிபுரிந்திருந்தாலும் இளைஞர்களே ஆர்வத்தோடு முன்வந்து ஈடுபடத் தயங்குகிற தொல்லியல் குறியீட்டுத் துறையில் மூத்த வயதிலும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருபவர் சுபாஷ் சந்திர போஸ். சமீபத்தில் சிந்து சமவெளி நாகரீத்தின் தமிழரின் தொடர்பு குறித்து Ancient Thamizh The Faculty of Harappan Symbols and Scripts என்ற ஆய்வு நுாலை எழுதி வெளியிட்டுள்ள அவரிடம் ஒரு சிறு நேர்காணல்:

*) பொறியாளரான உங்களுக்கு தொல்லியல் மற்றும் குறீயிடுத் துறையில் 
ஆர்வமும் அதற்கு வழிகாட்டிகளாகவும் இருந்தவர்கள் பற்றி?

இளம் வயதில் இருந்தே யாரும் செய்ய முடியாத சவாலான காரியங்களை நான் செய்து காட்ட வேண்டும் என்ற மனப்பாண்மை என்னிடம் உண்டு. அதன் அடிப்படையில் தன்னார்வத்தால் தொன்மையான குறியீடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன். இந்த கல்வெட்டு குறியீடுகள் துறையில் எண்ணை அறிமுகப்படுத்தியவர் அண்ணன் முனைவர் குடவாயில் பாலசுப்ரமன்யம். மற்றொரு வழிகாட்டியாக இருந்தவர் தொல்லியல் துறையை சார்ந்த முனைவர் பூங்குன்றன். அதேப் போல் அரியலுார் கலைக்கல்லுாரில் முதல்வராக இருந்த தியாகராஜன் போன்றோர் எனக்கு வழிகாட்டியாக செயல்பட்டனர். இதுப்போல பலப்பேர் இந்தத்துறையில் முன்னோடிகளாக உள்ளனர். வண்டி வகனம், புகைப்படம் எடுக்கும் கருவிகள் போன்ற எந்த வித வசதிகளும் இல்லாத காலத்தில் கடுமையான உழைப்பினால் நம் நாட்டின் பண்பாட்டை திரட்டிக் கொடுத்த இது போன்ற முன்னோடிகளை தமிழ் கூறும் நல்லுலகு என்றும் மறக்க கூடாது.  

*) களப்பணியின் போது உங்களுக்கு ஏற்பட்ட நேரடி சவால்கள்?

பொதுவாக தொல்லியில் துறைக்கு களப்பணி என்பது அடிப்படையான ஒன்றாகும். மிகக் கடினமானதாக இருந்தாலும் இதைச் சளிக்காமல் மேற்கொள்வதே அனுபவமிக்க ஆராய்சியாளனாக உயர்வதுக்கு வழி வகுக்கும்.நம் மக்களிடம் குறியீடுகள் மற்றும் கல்வெட்டுகள் குறித்த விழிப்புணர்வு மிகக்குறைவாகும். இத்தனையாண்டு கால இந்த துறை சார்ந்த அனுபவத்தில் நான் கண்டடைந்த பொது அம்சம் இதுவே. உதரணமாக, அந்த ஊரில் உள்ள நடுகல் அல்லது கல்வெட்டு போன்ற புராதான சின்னங்களை பற்றி கேட்டல் புரியாத எழுத்துக்களால் எழுதப்பட்ட அவற்றின் அருகில் யாரும் செல்லக்கூடாது. தொடக்கூடாது, தொட்டால் ரத்த வாந்தி எடுத்து நோய் வாய் ஏற்ப்படும், குறிப்பாக பெண்கள் செல்லக்கூடாது என்று தங்கள் அறியாமையை பயமாக வெளிப்படுத்துவார்கள்.

*) இவற்றின் பாதிப்பாக நீங்கள் கருதுவது?

இதன் காரணமாக இவற்றை கண்டு அச்சப்பட்டு பெரும்பாலும் அடையாளம் கட்ட யாரும் முன்வருபவர்கள் மிகக் குறைவு. இதை சில சுயநலவாதிகள் பொய்யான வதந்திகள் பரப்பி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வார்கள்.இந்த நிலையை போக்குவதற்கு அந்த ஊரில் உள்ள படித்த இளைஞர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்கு உங்களைப் போன்ற ஊடகங்களும் முன்வர வேண்டும். இது எங்களைப் போன்ற தன் ஆர்வளர்களுக்கு பெரிய உந்து சக்கியாக இருக்கும்.

*)இந்த ஆய்வுப் புத்தகம் எழுதும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து?

பொருளாதார பிரச்சனை ஆர்வக்கு குறைவு போன்ற பிரச்சனைகள் பலருக்கு இங்கே புத்தகம் எழுதுவதற்கு தடையாக உள்ளன.உதாரணமாக இந்த சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பான குறியீடுகளை பற்றிய ஆய்விற்கு மிக முக்கிய உதவியாக இருந்தது "The  corpus of Indus seal and Inscriptions" என்ற புத்தகம். அதிக விலை கொண்ட இந்த நுாலை அமெரிக்காவில் உள்ள எனது மகள் அங்கிருந்து வாங்கி அனுப்பினால். குறைவான வாசர்களே இருந்த போதிலும் தனிப்பட்ட ஊக்கத்தின் காரணமாக இதுவரை எட்டுப் புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். மேலும் இரண்டு நுால்கள் வெளி வர இருக்கிறது.

*) உண்மையான வரலாறு அதன் பின்புலம் குறித்து அவசியமாக தாங்கள் கருதுவது?

எந்த ஒரு நாடு தன் வரலாற்றையும் பண்பாட்டையும் மறந்துவிடுகிறதோ அது தன்னையே மறந்துவிடும். நமது வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள பழங்கால குறியீடுகள், ஓவியங்கள், நடுகல், கல்வெட்டுகள், ஓலைச்சுவடி போன்றவையே உதவுகின்றன. எனவே தமிழகம் மட்டுமில்லாது இந்திய முழுவதும் உள்ள இந்த தொன்மையான சின்னங்களை கண்டறிந்து, பாதுகாத்து தொகுப்பது அவசியம். அன்மையில் நான் படித்தறிந்த சிந்து சமவெளி முத்திரையில் பொறிக்கப்பட்ட குறியீடுகள் 7 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பழந்தமிழர் நாகரீகத்தை மட்டுமல்லாது அவர்கள் வாழ்வியல் உண்மைகளையும் விவரிக்கின்றது.

*)ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு(சிலருக்கு) தானமாக கொடுக்கப்பட்ட நிலங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுப் பதிவாக உள்ளதாக கூறப்படுகிறதே?

இது பற்றி உங்கள் கருத்துஇந்தக் கருத்தை மறுக்க முடியாது என்றாலும், அது மட்டுமே உண்மை என்று கூற முடியாது. அதற்கு உதாரணமாக 2 இடங்களை நான் இப்போது கூறுகிறேன். முதலாவது, திருச்சி– துறையூர் சாலையில் இடது புறத்தில் உள்ள கரட்டாம்பட்டி வயல் நிலத்திலுள்ள கல்துாண் உள்ள செய்தி, திருடர்களால் கவர்ந்து சென்ற பசு, ஆடுகளை மீட்டு கொண்டு வரும் வீரச்செயலில் இறந்தவரின் மகளுக்கு ஏர் உழவர்கள் கூட்டம் தானமாக நிலம் கொடுத்ததாக பதிவாகியுள்ளது.
இரண்டாவது, திருச்சி–கல்லணை சாலையில் அமைந்துள்ள திருவனர் சோலையில் வாழ்ந்த முத்து என்ற பிச்சைக்காரர், தான் பிச்சையெடுத்து சேமித்து வைத்த தொகையில் ஊர் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த தர்ம காரியத்தில் ஈடுபட்டார்
என்று குறிப்பிடுகிறது. இதுப்போல ஏராளமான கல்வெட்டுகள் குறியீட்டுகளுடன் தமிழ்நாட்டில் எண்ணிககையில் அடங்காத அளவிற்கு காணக்கிடைக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது இன்றையத் தேவை.

*) அப்படியானால் மக்களிடையே குறிப்பாக வருங்காலத் தலைமுறையிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?

அனைத்தையும் அரசாங்கமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டில் உள்ள கல்வி மையங்களில் இதன் விழிப்புணர்வு பற்றி சொற்பொழிவு நடத்தலாம். அதன் வாயிலாக வருங்கால சந்ததிகளுக்கு ஆள் மனதில் அந்த உணர்வை விதைத்தால் அது மரமாக வளர்ந்துவிடும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு ஊரில் உள்ள இளைஞர்களும் ஊடங்களுக்கு கடிதம் எழுதினால் அதன் வழியாக தன்னார்வளர்களுக்கு சென்றடைந்து அவர்கள் மூலம் ஆய்வுகள் நடத்தலாம். எந்த ஒரு உண்மையான தன்னார்வளர்களும் பொருட்செலவுக்கு பணம் கேட்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது குடிக்க தண்ணீரும், ஆய்வுக்கு உதவி மட்டுமே. ஆகவே நாங்கள் அமைப்பை நிறுவி குழுவாக செயல்பட்டு வருகிறோம்.

ஆய்வாளர்: திரு.சுபாஷ் சந்திர போஸ்,
நிருபர்: வ.கண்ணன், திருச்சி.



No comments:

Post a Comment