நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள சீனுவாசு சுப்பராய பாலிடெக்னிக் கால்லுாரியில் 1965 ஆம் ஆண்டில் படித்த மாணவர்களின் கலந்தாய்வு(சந்திப்பு) கூட்டம் திருச்சி அருண் ஹோட்டல் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் வெவ்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு பதவிகளில் பதவிகளில் பணியாற்றியவர்கள் ஒன்று கூடி கடந்த கால நினைவை பறிமாறிக்கொண்டனர். இது குறித்து விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பொதுப்பணித்துறையின் ஓய்வு பெற்ற நிர்வாகப் பொறியாளர்(Executive Engineer) திரு. கேசவ ராவ் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன் படித்த நண்பர்களான நாங்கள் ஒருங்கிணைய வேண்டும் என்ற என்ற எண்ணம் வந்ததற்கு காரணம் உள்ளது. எங்களுடைய நண்பர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நான் உட்பட 4 நண்பர்கள் அவரை வீட்டில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம். அப்போது தான் நாம் 4 பேர் ஒன்றாக சந்தித்தது போல நம்முடன் படித்த 40 பேரும் சந்தித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே கடந்த ஒரு மாதமாக வாட்ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இந்த நிகழ்சியை ஏற்பாடு செய்தோம். இதில் சுவாரஸ்மான விஷயம் என்னவென்றால் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் எங்களுக்கு முக அடையாளம் கூட மறந்து போயிருந்தது. அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொள்ள பேட்ஜ் ஒன்றை தயார் செய்து சட்டையில் அணிந்து கொண்டோம். மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் அரசாங்க துறைகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இந்த நிகழ்விற்காக ஓடி வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.இத்தணை வருடங்களுக்கு பின் சந்தித்த எங்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. எங்களுடையை குழந்தைகள், குடும்பம் இத்தனை வருட வாழ்க்கை குறித்து ஆவலுடன் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டோம். நாங்கள் அனைவரும் கூடி மகிழ்ந்து சிரித்து விளையாடி வாட போட என்று உரிமையோடு அழைத்து கொள்ள பல ஆண்டுக்குப் பிறகு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தனித்துவம் மிக்க சந்தோஷமான நிகழ்வு நிச்சயம் எங்கள் ஆயுளை 10 வருடம் அதிகமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று மன நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
நிருபர்: வ.கண்ணன், திருச்சி.
No comments:
Post a Comment